போலீஸார் பீய்ச்சியடித்த தண்ணீரின் வேகத்தை தாங்கி நின்ற முதியவர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர்.

 ஹவுரா பாலத்தில் மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார்அவர்களை கலைக்க அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அப்போது மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். 

எனினும் காவி உடை அணிந்த முதியவர் ஒருவர் தேசியக்கொடியை அசைத்தவாறு அந்த இடத்தை விட்டு சற்றும் அகலாமல் நின்றிருந்தார். போலீஸார் பீய்ச்சியடித்த தண்ணீரை அவர் தனி ஆளாக நின்று எதிர்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1828357956519248333

பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை | Thedipaar News

Related Posts