இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
379 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
355 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்துள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேநேரம் சினோபெக் நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது. (P)
எரிபொருள் விலையை குறைப்பதே என் முதல் பணி | Thedipaar News