Font size:
Print
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதையொட்டி மூன்று நாட்கள் மட்டும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் காசாவில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, போர் காரணமாக தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
மனிதாபிமானத்தின் அடிப்படையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, பல்வேறு பகுதிகளில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ரணிலுக்கு குதிரைகள் மூலம் பிரச்சாரம் | Thedipaar News
Related Posts