ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொலிஸார், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பாதுகாப் புப் பிரிவினருக்கான தபால்மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கடந்த இருநாட்களில் நிறைவடைந்திருந்தன.
விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை. முடிந்த இரு நாட்களிலும் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. மூன்றாம் நாளான இன்றைய தினமும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் நேற்று வியாழக்கிழமை (05) தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ‘‘தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. தபால்மூல வாக்களிப்பு விதிமுறை மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை. அதேபோன்று கண்காணிப்பு நடவடிக்கைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தபால்மூல வாக்களிப்பு இடங்களில் எவ்வித இடையூறும் இடம்பெற்றிருக்காவிட்டாலும் வெளியில் தேர்தல் சட்டவிதி முறை மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. (P)