கையில் மகளுடன் உணவு டெலிவரி செய்யும் தகப்பன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கையில் மகளுடன் ஸோமாட்டோ டெலிவரி பணியை செய்து வரும் சோனுவை ஸ்டார்பக்ஸ் மேலாளர் தேவேந்திர மெஹ்ரா வெகுவாக பாராட்டியுள்ளார்.

புதுடெல்லி கான் மார்க்கெட் பகுதியில் உள்ள எங்கள் ஸ்டார்பக்ஸ் கடையின் ஆர்டரை எடுக்க சோனு என்ற ஸோமாட்டோ டெலிவரி பாய் தனது இரண்டு வயது மகளுடன் வந்திருந்தார். அவரை விசாரித்தபோதுதான் அவர் ஒரு சிங்கிள் பேரண்ட் என்பது தெரியவந்தது.

ஒரு கையில் குழந்தை மறுகையில் டெலிவரி பார்சல்என மகளின் எதிர்கால வாழ்கைக்காக போராடும் சோனுவின் போராட்டம் மற்றவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. அப்பாவும், மகளும் நலமாக வாழ எங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துகள் என தேவேந்திர மெஹ்ராகூறியுள்ளார். 

Related Posts