Font size: 15px12px
Print
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த ஆகஸ்ட் 27-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரில், மூவர் ஏற்கெனவே ஒருமுறை கைது செய்யப்பட்டவர்கள் என்று கூறி அவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கெனவே தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி தண்டம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும், மீண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவே இலங்கை அரசு பெருந்தொகையை அபராதமாக விதிக்கிறது. இலங்கை அரசின் இந்த அட்டகாசத்தை இனியும் அனுமதிக்கக்கூடாது தமிழக அரசியல் பிரமுகர் அன்புமணி கூறியுள்ளார்.
Related Posts