சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கிறது இந்தியா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதல்முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் திறக்கும் திட்டத்தை இந்தியா அறிவித்தது. இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

தொழில்நுட்பம் மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை வளர்ப்பதை இந்த ஒப்பந்தம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. 

திறன் மேம்பாட்டு துறையில் இரு நாடுகள் இணைந்து செயல்படுவதை இது ஊக்குவிக்கும். மேலும், இந்தியா - சிங்கப்பூர் இடையிலான பன்னெடுங்கால கலாச்சார பிணைப்பை பிரதிபலிக்கும் வகையில் சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையத்தை திறப்பதற்கான திட் டத்தையும் இந்தியா இந்த சந்திப்பின்போது அறிவித்தது.

Related Posts