Font size: 15px12px
Print
இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய நீதிபதிகளை நியமித்துள்ளார்.
அதன்படி இந்த நியமனங்கள் இன்று (செப்டெம்பர் 06)முதல் நடைமுறைக்கு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச். குலதுங்க (K.M.G.H. Kulatunga), டி.தொட்டாவத்த (D. Thotawatte), ஆர்.ஏ.ரணராஜா (R.A .Ranaraja) மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கோபல்லவ (M.C.L.B. Gopallawa) ஆகியோரே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 107 வது சரத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. (P)
Related Posts