‘நமக்காக நாம்’ பிரசார பயணம் யாழில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் பரப்புரை!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை (06) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இந்த பரப்புரை நடவடிக்கையில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். (P)


Related Posts