இன்றைய வானிலை முன்னறிவிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இன்று (09) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை நிலைமையில் சற்று அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.​​

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. (P)

கடலுக்கு செல்ல வேண்டாம் | Thedipaar News

Related Posts