ரொறன்ரோ டவுன்டவுனில் பொலிஸை தாக்கிய பெண்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ டவுன்டவுனில் பொலிஸை தாக்கிய 21 வயது பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார் என குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இடையூறு விளைவித்தார் என இந்தப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யோங் மற்றும் காலேஜ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த வெறுப்புணர்வு போராட்டம் இடம் பெற்றுள்ளது.

 போராட்டக்காரர்கள் வர்த்தக கட்டிடம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் குறித்த பேராட்டக்காரர்கள் தடுக்க முற்பட்டுள்ளனர்.

 பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் எனவும் பொலிஸாரை தாக்கியதாகவும் குறித்த பெண்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 21 வயதான மேரி கிரேஸ் ஒர்மன்ட் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாவது முறையாக யாழில் இரத்து ; சஜித்தின் பிரசாரக்கூட்டம் | Thedipaar News

Related Posts