2024 ஜனாதிபதி தேர்தல்: வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்ற உத்தரவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 74 ஆவது பிரிவின் கீழ் அது குற்றமாகும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்தும் அடையாளங்கள், புகைப்படங்களுடன் கூடிய ஸ்டிக்கர்கள், கொடிகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு அனைத்து பொலிஸ் அதிகார பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அவசர சோதனைகளை மேற்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,041 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (P)

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி கின்னஸ் உலக சாதனை | Thedipaar News

Related Posts