கடந்த மாதம் 2024.08.10 ஆம் திகதி ஆரம்பமான பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடைபெற்று இன்று முடிவுக்கு வந்தது. அதன் இறுதி நாளான இன்று அதி கூடிய ஒட்டகங்கள் போட்டி நிகழ்ச்சிக்கு பங்கு பற்றியமைக்காக உலக சாதனை விருது வழங்கப்பட்டது. உலகளாவிய ரீதியில் முதல் தடவையாக அதி கூடிய (21,637) ஒட்டகங்கள் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை காண்பதற்காக சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் OL Ameer Ajwad அவர்களும் சென்று அங்கு இந்தப் போட்டி நிகழ்ச்சி குறித்து கருத்துக்களை தெரிவித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
குறிப்பாக இந்த நிகழ்வில் இலங்கை கொட்டராமுல்லையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் மற்றும் காணொளி வடிவமைப்பாளரான முஹம்மது ஸைத் பணியாற்றியமையும் பெருமை அளிக்கின்றது.
அவரது பணிகள் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ரணில் விக்ரமசிங்கவுக்கான மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது - ராஜித நம்பிக்கை | Thedipaar News