ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை தொடர்கிறது. ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் குறித்த நபர்கள் சட்டவிரோத ஆட்கள் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மோசடி, வன்முறைகள், உளவியல் ரீதியான அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் 25 வயது முதல் 35 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மிஸஸசாகா, பிராம்ப்டன், ஷெல்பர்ன், கோர்டைஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட அடிப்படையில் நீண்ட காலமாக இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் நிறுத்தப்படும்! | Thedipaar News