வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பில் கனேடிய அரசின் அதிரடி முடிவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனேடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை விட, நடப்பாண்டில் 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது, அடுத்த ஆண்டு மேலும் 10 சதவீதம் குறைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை தவறான காரியங்களுக்கு சிலர் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்க முடியாது. எனவே, தான் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியில் விதிகளை மாற்றியுள்ளோம் என கூறினார். 

Related Posts