Font size:
Print
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ்,மலையாளம்,கன்னடம், தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தும் எந்த படமும் இவருக்கு ஹிட் ஆகவில்லை. இருப்பினும் விடாமுயற்சியுடன் போராடி இப்போது முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.
அடுத்ததாக இந்தியன் 3 படத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்தும் நடித்துள்ளார்.
மேலும் இவர் தெலுங்கில் உருவாகி வரும் கண்ணப்பா எனும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்திலும் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரமாண்டமான முறையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2022ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.இந்த நிலையில், காஜல் அகர்வால் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும், காஜல் அகர்வாலின் மகனா இது? நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள்.
காபந்து அரசாங்கம் - நால்வர் கொண்ட அமைச்சரவை | Thedipaar News
Related Posts