வெளியானது பிக்பாஸ் ஒளிபரப்பாகும் தேதி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் அடுத்த சீசன் தொடங்க முதற்கட்ட பணிகளை தற்போது சேனல் செய்து வருகிறது. 8வது சீசனில் கமலுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்திருப்பது தொடங்கி போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என்பது வரை பல விதமான தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கிறது. காமெடியன் செந்தில் தொடங்கி சர்ச்சை பிரபலங்கள் வரை போட்டியாளர்களாக யாரெல்லாம் வருகிறார்கள் என ஒரு பெரிய உத்தேச லிஸ்ட் வந்திருக்கிறது.இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 8வது சீசன் தொடங்கும் தேதி உறுதியாகி இருக்கிறது. 

அக்டோபர் மாதம் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் ஷோ தொடங்க இருக்கிறது. பிரமாண்ட தொடக்க விழாவுடன் தான் நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கிறது. இதை ப்ரோமோ உடன் விஜய் டிவி விரைவில் அறிவிக்க இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சி குறித்த பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. காரணம் பிரபல சேனல்களில் ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சியும் மக்களை என்டர்டைன் செய்வதில்லை. பிக்பாஸ் ஆவது மக்களை என்டர்டைன் செய்யுமா? பார்ப்போம்.

Related Posts