லெபனானை உருக்குலைத்த இஸ்ரேல்; புதிய எச்சரிக்கையால் மக்கள் பதற்றம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


லெபனானில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300 இடங்களில் மீது 12 போர் விமானங்களில் குண்டு வீசியது இஸ்ரேல் விமானப்படை.

தாக்குதலை விரிவுபடுத்த உள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17 ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.

இதில் பலர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இதிலும் பலர் பலியாகினர். ஆயிரக் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

லெபனானின் தலைநகர் பெரூட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் போர் பதற்றம் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். மேலும், 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் விமானப்படை இன்று அதிகாலை தெற்கு லெபனான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, அடுத்த நகர்வாக ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்திட இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. (R)

ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த ஜனாதிபதி | Thedipaar News

Related Posts