போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்கும் கும்பலுக்கு அரசு வைத்த ஆப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யவும், ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்க நிலங்களை உடனடியாக மீட்டெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, தமிழகத்தில் நில அபகரிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஐகோர்ட் கண்டித்ததை அடுத்து வெளியாகியுள்ளது. ஐகோர்ட் தனது தீர்ப்பில், போலீஸ், ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் நில அபகரிப்பு சம்பவங்கள் நடப்பதாக வேதனை தெரிவித்திருந்தது. இந்த உத்தரவின் மூலம், நில அபகரிப்புக்கு துணை போகும் அனைத்து தரப்பினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நில உரிமையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

Related Posts