சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். கேரளாவையே உலுக்கி கொண்டு இருக்கும் இந்த நிகழ்வு குறித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவே வாயடைத்து போயுள்ளது. ஏனெனில் இதில் பெரிய நடிகர்களின் பெயர்களும் பா*லியல் லிஸ்டில் உள்ளதால் இந்திய சினிமாவே அதிர்ச்சியில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து வெற்றிமாறன் கூறியது, குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவரின் பக்கம்தான் நிற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம்தான் எப்போதும் கேள்விகள் எழுப்பப்படுவதாக அவர் வருத்தம் தெரிவித்தார். நீங்கள் ஏன் அப்போதே கூறவில்லை? நீங்கள் இடம் கொடுக்காமல் இப்படி நடந்திருக்குமா? எனக் கேட்பது மிகவும் தவறானது என அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீது நம்பிக்கை இழந்து மௌனமாக இருக்கின்றனர் என்றும், அவர்களின் குரலை உயர்த்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார். வெற்றிமாறனின் இந்த கருத்து, சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலானோர் அவரது கருத்தை ஆதரித்துள்ளனர்.
கேரளாவில் மட்டும் அல்ல தமிழ் நடிகைகளும் தங்களுக்கு நடந்த கொ*டூரம் குறித்து முன்வந்து பேட்டி கொடுத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நடந்த தவறு குறித்து கேள்வி கேட்காமல் பேட்டி எடுக்கும் தொகுப்பாளர்களே நீங்க ஏன் அப்போதே இது குறித்து பேசவில்லை என முட்டாள் தனமாக கேட்பதை பார்க்க முடிகிறது. பிரபலமாக உள்ள ஒருவர் குறித்து வளர்ந்து வரும் நடிகை குற்றம் சாட்டினால் அந்த பெண்ணிற்கு அடுத்து அந்த துறையில் வாய்ப்பு கிடைக்குமா? இல்லை நடிகை சொன்ன குற்றசாட்டை தான் நம்புவார்களா? இந்த சாதாரண அறிவு கூட இல்லாமல் பலர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக பேசுவதை சரியாக புரிந்து கொண்டு வெற்றிமாறன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.