மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கும் செந்தில் பாலாஜி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் 471 நாட்களாக சிறையில் இருந்தார். இவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு கொடுத்தனர். இந்த வழக்கில் 30 நாட்களுக்கு மேலாக விசாரணைகள் நடந்த நிலையில் தற்போது அனைத்து விசாரணைகளும் முடிவடைந்ததால் தற்போது அவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. தலா 25 லட்ச ரூபாய் உத்திரவாத தொகையுடன் 2 பேர் ஜாமின் வழங்க ஒப்புதல் வழங்க வேண்டும். சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது மற்றும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் இதனால் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Related Posts