பெரு வெற்றி கண்ட ரொறன்ரோ தமிழ் திரைப்பட விழா-2024

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமா மற்றும் கலாச்சாரத்தை உலக அரங்கிற்கு எடுத்து செல்ல ஒவ்வொரு ஆண்டு கனடாவில் ரொறன்ரோ சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்திருக்கும் யோர்க் சினிமா வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 தொடங்கியது. 

இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளில் உருவான தமிழ் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியன திரையிடப்பட்டது.  குறிப்பாக இந்த வருடத்தில் பல தமிழ் மொழி அல்லாத மொழிகளில் தயாரிக்கப்பெற்ற திரைப்படங்களும் போட்டிக்கு வந்தது. இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமல் ஏனைய சில மாநிலங்களிலும் நன்கு பேசப்படும் ஒரு திரைப்பட விழாவாக ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா பெயரெடுத்துள்ளது.

விழாவில் பங்கேற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் திரைப்படங்களை வழங்கவும், பார்வையாளர்களுடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வந்தனர். தெரிவிக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பெற்ற திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. 

ரொறன்ரோ சர்வதேச தமிழ் திரைப்பட விழா வைபவத்தில் பல சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு திரைப்பட விழாவின் ஆரம்ப வைபவத்தை சிறப்பித்தார்கள். அங்கு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு அரசு சார்பான வாழ்த்துப் பத்திரங்களையும் வழங்கிச் சென்றார்கள்.

சாள்ஸ் நிர்மலநாதன் ஊடக சந்திப்பு | Thedipaar News

Related Posts