பிரபல நடிகையின் இளவயசு புகைப்படம்! சத்தியமா நம்ப மாட்டீங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை திவ்யபாரதி பேச்சிலர், மகாராஜா போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார். அதற்கு முக்கிய காரணமே இவர் நடித்த முதல் படத்திலே எக்கசக்க க*வர்ச்சி, படமும் இளசுகள் தொடர்பான கதை என்பதால் விரைவில் சினிமா வட்டாரத்தில் அறியப்பட்ட நடிகையாக மாறினார். 

தற்போது, பிரபல நடிகையாக வலம் வரும் இவர் தனது கல்லூரி காலங்களில் உருவ கேலி கிண்டலுக்கு ஆளானார் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். நடிகை திவ்ய பாரதி கூறிய பேட்டியில், நான் கல்லூரி படிக்கும்போது பலர் எனது உடல் அமைப்பை வைத்து எலும்புக்கூடு என கிண்டல் செய்வார்கள்.

இந்த கமெண்ட்கள் என்னை கடுமையாக பாதித்தது.பிறகு, நான் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி அதில் என் புகைப்படங்களை பதிவிட்டேன் அதில் அனைவரும் என்னை பாராட்டினார்கள். அப்போது தான் எனக்கு இது போன்ற உடல் அமைப்பை வைத்திருப்பது பரவாயில்லை நாம் நம்மை நேசிக்க வேண்டும் என்று கற்று கொண்டேன் என்று கூறியுள்ளார். இவரை எல்லோரும் கேலி செய்த அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் கேலி செய்யும் அளவிற்கு இல்லை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்

Related Posts