மற்றுமொரு கட்டணம் குறைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எரிபொருள் விலை குறைப்புக்கு இணையாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று (01) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.

அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்ததால், அந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 4% குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கொள்கலன்போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எமது செயற்குழு தீர்மானித்துள்ளது. என்றார்.  (P)


Related Posts