Font size:
Print
லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமால் பண்டார விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேவையற்ற பயணங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுங்களுமாறும், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் PIBA வழங்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அத்தியாவசிய உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளுமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். (P)
Related Posts