40 வருடம் இயங்கிய கலதாரி ஹோட்டல் இனி இலங்கையில் இல்லை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

1984 ஒக்டோபர் மாதம் முதல் கொழும்பில் இயங்கி வந்த கலதாரி ஹோட்டல் செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் இலங்கையில் இயங்காது என தெரிவித்துள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட அப்துர் ரஹ்மான் கலதாரி என்பவரால் உருவாக்கப்பட்ட கலதாரி ஹோட்டல் பல நாடுகளில் இயங்கி வருகின்றது.

1984 முதல் மெரிடியன் ஹோட்டல்ஸினால் முகாமை செய்யப்பட்டு கலதாரி மெரிடியன் கொழும்பு என்ற பெயரிலும் 1992 முதல் மெரியட் அன்ட் ரிசோட்டினால் முகாமை செய்ய்பட்டு கொழும்பு மெரியட் என்ற பெயரிலும் இலங்கையில் இயங்கி வந்தது.

1994 ஆம் ஆண்டு முதல் கலதாரி பிரதர்ஸினால் பொறுப்பேற்கப்பட்ட பின்னர் கலதாரி ஹோட்டல் என்ற பெயரில் இயங்கி வந்தது.

அன்று முதல் இலங்கையில் அரபு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாக கலதாரி ஹோட்டல் இலங்கையில் இயங்கியது.

40 வருட சேவையின் பின்னர் நாட்டை விட்டு செல்லும் இந்த ஹோட்டலை ரெடிசன் ப்ளூ நிறுவனம் பொறுப்பேற்று ‘ரெடிசன் ப்ளூ ஹோட்டல் கலதாரி கொழும்பு’ (Radisson Blu Hotel Galadari Colombo) என்ற பெயரில் செயற்படவிருக்கிறது.

தற்போது இந்த ஹோட்டலின் மறுசீரமைப்புக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. (P)


Related Posts