இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க புதிய சூப்பர் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த செயலி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு, ரயில் நேரம் பார்க்கும் வசதி, உணவு ஆர்டர் செய்யும் சேவை, சுற்றுலா மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகள் என அனைத்தும் ஒரே செயலியில் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் பயணிகள் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், ஒரு செயலியிலேயே அனைத்து சேவைகளையும் பெற முடியும்.
இந்த புதிய சூப்பர் ஆப் எதிர்வரும் 3 மாதங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 85% பயணிகள் IRCTC செயலியை பயன்படுத்தி வருவதாகவும், இந்த புதிய செயலி அறிமுகமான பிறகு பயணிகள் பயன்பாட்டிற்கு மிக எளிமையான ஒரு கூடுதல் வசதியாக இது இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்சங்கர் – விஜித ஹேரத் சந்திப்பு | Thedipaar News