தென்னாப்ரிக்காவில் வெள்ளை இன பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணையில், தூக்கி எறியப்படும் பொருள்களை எடுத்துவர அவ்வப்போது அப்பகுதியில் வசிக்கும் கறுப்பின மக்கள் செல்வதுண்டு. அப்படி சென்ற இரண்டு கறுப்பின பெண்கள் திரும்பவில்லை.
இந்நிலையில் மரியா (44) மற்றும் லொகாடியா (35) இருவரும் அந்தப் பண்ணைக்குள்ளேயே கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பன்றிகளுக்கு உணவாக்கப்பட்ட கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இரண்டு பெண்களின் உடல்களும் பன்றிகளால் சாப்பிட்டு மிச்சம் வைக்கப்பட்டு, அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு நீதி வேண்டி கோர்ட்டு அருகே ஏராளமான கறுப்பின பெண்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில், பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு தொழிலாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இரண்டு பெண்களையும் சுட்டுக்கொன்று, அவர்களது உடல்களை வெட்டி பன்றிக்கு உணவாக்கியிருப்பதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணையில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேர் மீதான கொலை வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கனடாவில் ராபீஸ் நோய் தொற்று | Thedipaar News