வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட நடிகை! தமிழ் சினிமாவில் மட்டும் இது ஏனோ?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களின் மூலம் பாப்புலர் ஆனவர். அடுத்து அவர் விக்ரமின் தங்கலான் படத்திலும் ஹீரோயினாக நடித்து இருந்தார். எப்போதும் சர்*ச்சையாக பேசி திரை உலகில் சலசலப்பை ஏற்படுத்துவதில் வல்லவர். ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அவர் நடித்து இருக்கும் நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவிற்கும் ஹிந்தி சினிமாவிற்கும் வித்தியாசம் பற்றி பேசி இருக்கிறார்.தென்னிந்திய சினிமாவில் படம் நன்றாக ஓடுகிறது என்றால் அதற்கு காரணம் ஹீரோ தான் என சொல்வார்கள். ஆனால் அதுவே படம் பிளாப் ஆகிவிட்டால் உடனே அதற்கு ஹீரோயின் தான் காரணம் என சொல்வார்கள். தென்னிந்திய சினிமாவில் தான் இப்படி சாதாரணமாக நடக்கிறது என மாளவிகா மோகனன் ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். இவர் சொல்வதும் உண்மை தானே? 

ஹீரோயின் ஹீரோ என்ற பாகுபாடு இன்றும் இருந்து கொண்டு தானே உள்ளது? ஹீரோவுக்கு சம்பளம் 100 கோடியில் என்றால் ஹீரோயினுக்கு சில கோடிகள் தானே? உதாரணத்துக்கு முன்னணி ஹீரோவின் படத்தை எடுத்து கொள்வோம். ரஜினி மற்றும் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்றால் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஒரே சம்பளமா? என்னதான் அனுபவம், திறமை வைத்து கொண்டால், ஹீரோயினுக்கு ஊதியம் என்பது ஹீரோ வாங்குவதில் 1% தானே? இந்த பாகுபாடு உண்மை என்றால் மாளவிகா மேனன் சொல்வதும் உண்மைதானே?

இஸ்ரேல் வடக்கில் அபாய சமிஞ்சை ஒலி | Thedipaar News

Related Posts