51/1க்கு அனுர அரசாங்கமும் எதிர்ப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை (07) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

  •      நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எனும் தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2024.09.09 தொடக்கம் 2024.10.11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டு, இலங்கை அரசின் நிலைப்பாட்டை கீழ்க்காணும் வகையில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

  • நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்;சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், சாட்சிகளைத் திரட்டுகின்ற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாததுடன்,
  • தீர்மானத்தை நிராகரித்திருப்பினும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளது.
  • மனித உரிமைகள் பேரவை மற்றும் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடனும், மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். (P)

Related Posts