Font size:
Print
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரிய தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் நேற்று உரையாற்றிய கிம் ஜான் உங், “உண்மையைச் சொல்வதென்றால், தென் கொரியாவைத் தாக்கும் எண்ணம் எங்களுக்கு முற்றிலும் இல்லை.
அதேநேரத்தில், எதிரிகள் ஆயுதங்கள் தாங்கிய படைகளைப் பயன்படுத்த முற்பட்டால் தயக்கமின்றி அவர்களுக்கு எதிராக அனைத்து தாக்குதல் திறன்களையும் பயன்படுத்துவோம். அதில், அணு ஆயுதங்கள் பயன்பாட்டையும் தவிர்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Related Posts