Font size:
Print
ஆஸ்திரேலியா சிட்னியிலிருந்து ஜப்பானின் ஹனேடா நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது குவாண்டாஸ் விமானம். குவாண்டாஸ் விமானத்தில் வைக்கப்பட்டிருந்த திரைகளில் பொதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டு வந்துள்ளனர் பயணிகள்.
அப்போது தீடீரென விமானத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து திரைகளிலும் ஆபாசப்படங்கள் ஒளிப்பரப்பாக ஆரம்பித்துள்ளது.. இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அதை நிறுத்துவதற்கு முற்பட்டுள்ளனர்.
ஆனால், அதை ஆஃப் செய்யவும் முடியாமல் போனதால், பலருக்கு பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக அச்சூழல் மாறியுள்ளது. இப்படியான சூழலில், கிட்டதட்ட 1 மணி நேரமாக ஆபாசப்படம் ஒளிப்பரப்பட்டுள்ளது.
பொழுது போக்கு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பபழுதுதான் காரணம் என்று ஊழியர்கள் விளக்கமளித்துள்ளனர்.
Related Posts