மாபெரும் சாம்பராஜ்யமே சரிந்தது! இந்தியாவே ஒரே இடத்தில்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரத்தன் டாடாவின் உடல் மக்களின் அஞ்சலிக்காக மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்கில் வைக்கப்படவுள்ளது. காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.ரத்தன் டாடா, முதுமையைச் சுட்டிக்காட்டும் உடல் நலக்குறைவால் மும்பை பிரீச் கெண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை இரவு உயிரிழந்தார். டாடா குழுமம் மற்றும் தொழில்துறையினர் இரங்கல் தெரிவித்தனர். மரணத்திற்கு பின்னர், அவரது உடல் கொலாபா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, குடும்பத்தினர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மக்கள் அவரது மறைவை தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் தைரியமான தொழில் அணுகுமுறையும், சமூக சேவைகளில் அவர் காட்டிய அர்ப்பணிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டு, அவர் இறந்த பின் கூட பெரும் மரியாதையைப் பெற்றுள்ளார்.

Related Posts