பிரபலத்தை பிக்பாஸிற்கு சிபாரிசு செய்து வைத்த வனிதா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 பிரம்மாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த நிலையில், முதல் நாளே ஒரு எலிமினேஷன் நடைபெற்றது.இதில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சாச்சனா பிக் பாஸ் 8ல் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் வேறு யாரும் இல்லை மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்தவர். இந்த சீசனில் ஆண்கள் vs பெண்கள் என பிரிக்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக இந்த சீசன் சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசன்களுக்கும் இந்த சீசனுக்கும் என்ன வித்தியாசம் என்றால், கடந்த சீசனின் போட்டியாளர்கள் வந்த ஒரு வாரம் நடிப்பார்கள், போக போக அடித்து கொள்வார்கள். 

இந்த சீசனில் வந்த உடனே எல்லா போட்டியாளர்களும் அடித்து கொள்கிறார்கள். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வரும் வனிதா விஜயகுமார். தற்போது, இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ரவீந்தரின் பெயர் இரண்டு சீசன்களாகவே அடிபட்டு வந்தது. அப்போது நான் தான் அவரை சிபாரிசு செய்து வைத்தேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும், இந்த சீசனில் மற்றொரு போட்டியாளரான முத்துக்குமரன் மிகவும் புத்திசாலி என கூறியுள்ளார்.

Related Posts