திடீரென வாயடைத்து போகும் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை அலறவிட்ட நயன்தாரா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை நயன்தாரா, சினிமா பயணமோ சொந்த வாழ்க்கையோ இரண்டையும் வெற்றிகரமாக பார்த்து வருகிறார். சில நடிகைகள் சொந்த வாழ்க்கையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தாலும் தொழில் சார்ந்த வேலையில் பெரிதாக முன்னேற்றம் இல்லாமல் இருப்பார்கள். சிலரோ வேலையில் சிங்கக்குட்டியாக இருந்துவிட்டு சொந்த வாழ்க்கையில் பூச்சியமாக இருப்பார்கள். ஆனால் நயன்தாரா தொழிலாக இருக்கட்டும், சொந்த வாழ்க்கையாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் டாப்பில் உள்ளார். ஏன் பல பிசினஸ் செய்து வருகிறார். எல்லாவற்றிலும் இவர் தானே நம்பர் ஒன். இவர் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சர்யபட ஒன்றும் இல்லை.

 இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளத்தை தாண்டி இப்போது அட்லீ இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.அடுத்தடுத்து அங்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் நயன்தாரா இப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களாக பதிவிட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்த நிலையில் சிவப்பு நிற புடவையில் அதற்கு மேட்சிங் பிளஸ் போட்டு பூ வைத்து லட்சணமான லுக்கில் போட்டோ ஷுட் ஒன்று நடத்தி வெளியிட்டுள்ளார்.அதைப்பார்த்த ரசிகர்கள் கார்ஜியஸ், அம்மன் போலவே உள்ளீர்கள் என நிறைய கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Related Posts