பிக்பாஸ் 8 தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி.100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் மக்களும் ஆர்வமாக ஷோவை பார்த்து வருகிறார்கள். முதல் நாளே பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து சச்சனா வெளியேறியது அனைவருக்குமே அதிர்ச்சி கொடுத்தது. அதுமட்டுமா? போட்டியாளர்கள் பயங்கரமாக ஒருவரை ஒருவர் கோள்மூட்டி கொள்வதும் கோவமாக சண்டை போடுவதும் என்னவென்று சொல்வது?அடுத்து வீட்டில் ரவீந்திரன், தீபக் போன்ற போட்டியாளர்களின் உடல்நிலையும் சரியில்லாமல் இருக்கிறது.
இன்னொரு பக்கம் ஹிந்தியில் பிக்பாஸ் 18வது சீசன் தொடங்கியுள்ளது. அதில் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமான நடிகையும் குக் வித் கோமாளி டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா கலந்துகொண்டுள்ளார்.இவர் தமிழ் பக்கம் வருவார் என எதிர்பார்த்தால் ஹிந்தி பக்கம் ஓடிவிட்டார். இவர் சூர்யாவுடன் ஸ்ரீ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் சில படங்கள் நடித்துள்ளார் ஆனால் எல்லாமே தோல்வி தான். இந்த நடிகை பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இவர் தமிழில் பல படங்கள் நடித்தும் சரியாக எந்த படமும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பை கொடுக்காத காரணத்தால் முற்றிலும் சினிமாவை விட்டு விலகினார்.
பல ஆண்டுகளுக்கு பின்னர் இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் போட்டியாளராக களம் இறங்கி வெற்றியும் பெற்றார். அடுத்தடுத்து விஜய் டிவியில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வெற்றியும் கண்டார். இப்போது ஹிந்தி பிக்பாஸ் பக்கம் சென்றுள்ளார். ஒருவருக்கு வெற்றி எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு இவரே உதாரணம். இவர் ஹிந்தி பிக்பாஸ் ஷோவில் தமிழில் பேச பிக்பாஸ் ஸ்ருதிகாவிடம் என்ன நடக்கிறது என ஜாலியாக பேசியுள்ளார். சொல்லப்போனால் ஹிந்தி பிக்பாஸில் நாளுக்கு நாள் ஸ்ருதிகாவிற்கு ஆதரவு கூடிக்கொண்டே இருக்கிறது.