இந்திய பிரதமர் மோடியை சந்தித்த பிரதமர் ஜஸ்டின்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆசியான் என அழைக்கப்படுகிறது. அதேபோல, கிழக்கு ஆசியா அமைப்பில் 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடுகள் லாவோஸ் நாட்டின் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியேனில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தான் இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளனர். இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ, சிபிசி செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார். 

 “இதுவொரு சின்ன சந்திப்பு. நாம் இருவரும் இணைந்து செய்ய வேண்டிய வேலை உள்ளது என நான் தெரிவித்தேன்.

இருவரும் என்ன பேசினோம் என்பதை விரிவாக சொல்ல முடியாது. ஆனால், கனடா மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது கனடா அரசின் அடிப்படை பொறுப்பாகும். அதை நான் அப்படியே தொடர்வேன்” என கூறியுள்ளார்.

Related Posts