டிசம்பர் நெருங்க நெருங்க மழை பொழிவும் அதிகரிக்குதே?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போது மதியம் ஒரு மணி வரை தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், கரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. பொதுவாக டிசம்பர் நெருங்க நெருங்க மழை பொழிவும் அதிகரித்து அதனால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்பது மக்கள் மத்தியில் இருக்கும் பயமாகும் அதற்கு ஏற்றாற் போல இப்போது மழைப்பொழிவும் அதிகரித்துள்ளது.

Related Posts