தமிழகத்தில் புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் உள்ள சவர்மா கடையில் சிக்கன் ரோல் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் சம்பந்தப்பட்ட சவர்மா கடையில் அதிரடியாக சோதனை நடத்தினார். அப்போது அக்கடையில் கெட்டுப்போன சிக்கன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சவர்மாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதித்து வாய்மொழி உத்தரவு வழங்கி உள்ளோம். அதனை மீறி சவர்மா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சவர்மா கடை நடத்த வேண்டும் என்றால் அதற்கென்று உரிய முறையில் உணவு தயாரிக்க தெரிந்தவர்தான் அதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தெரிந்தாலும் உரிய அனுமதி பெற்ற பின்னர்தான் அந்த கடையை நடத்த வேண்டும் என அதிகாரி கூறியுள்ளார்.