புவி ஈர்ப்பு விசையை மீறி மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்பிய ராக்கெட்! (video)

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது 400-அடி உயர ஸ்டார்ஷிப் வாகனத்தை ஐந்தாவது முறையாக அக்டோபர் 13ம் தேதி ஏவியது. 

தெற்கு டெக்சாஸில் உள்ள அதன் ஸ்டார்பேஸ் தளத்தில் இருந்து காலை 8:25 மணிக்கு ராட்சத ராக்கெட்டை மேலே அனுப்பியது. இதுவரை உருவாக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஆனது வானத்தை நோக்கி சென்றுவிட்டு மீண்டும் அதே ஏவுதளத்திற்கு திரும்பிய நிகழ்வை முதல்முறையாக SpaceX செய்துகாட்டியது. இது எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஐந்தாவது ராக்கெட் சோதனையில் 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட்டானது புவி ஈர்ப்பு விசையை மீறி ஏவுதளத்தில் தானாக வந்திறங்கி அதிசயிக்க வைத்தது. இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை. இது SpaceX நிறுவனத்தின் மற்றுபயன்பாட்டு ராக்கெட் மேம்பாட்டு முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1845467052443828579

Related Posts