வதந்திகளை பரப்புவோர் மூக்கை உடைக்கும் வகையில் பதிலடி கொடுத்த நடிகர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது குடும்ப வாழ்க்கையில் விழுந்த விரிசல் தான் பல யூடியூப் சேனல்களுக்கு டாப்பிக். ரவியே முன்வந்து பல பேட்டிகள் கொடுத்து உண்மை நிலவரத்தை சொன்னாலும் கூட சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இவர் பற்றி வதந்திகளை கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில், புரோமோசன் பணிகளில் படக்குழு மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். 

அதில், பிரதர் படம் என் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மிகவும் பொருந்தி போகும். இந்த படத்தில் இருக்கும் காட்சிகள் என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை நியாபகப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. என் சினிமா வாழக்கை பற்றி மற்றவர்கள் கூறும் கருத்தை கேட்டு கொண்டு அதன்படி நடப்பேன். ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதை பெரிதாக நான் கண்டு கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளார். இவரது குடும்ப வாழ்க்கை பற்றி வதந்திகளை கூறும் நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் பாணியில் தான் இப்படி கூறியுள்ளார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

Related Posts