பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் விஜய் சேதுபதி மகன்! போட்டியாளரா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா அளவில் புகழ் பெற்ற நடிகராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென சினிமாவில் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர். இவரது ரசிகர்களுக்கு எப்போதும் இவர் மீது தனிப்பிரியம் என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் எல்லா ரசிகர்களிடமும் நின்று போட்டோ எடுத்து கொண்டு முத்தமும் கொடுத்து,தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை மிகவும் வலுவாக்கி விட்டார். இவர் தேர்தலில் நின்றால் கூட மக்கள் செல்வாக்கிற்கு எந்த குறைச்சலும் இருக்காது நடிப்பது மட்டுமில்லாமல் தற்போது, இவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்

18 போட்டியாளர்கள் கொண்டு மிகவும் பிரமாண்டமாக தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் விஜய் சேதுபதி மகன் சூர்யா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது சூர்யா பீனிக்ஸ் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த படம் ஸ்டண்ட் மாஸ்டரான அனல் அரசு இயக்கத்தில் நவம்பர் மாதம் வெளிவர உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது

Related Posts