எகிப்தின் 118 பிரமிடுகளில் மிகப்பெரியது, கிசாவின் கிரேட் பிரமிடு ஆகும். இந்தப் பிரமிடுகளில் ஏறுவதற்குச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய பிரமிடுகளை பாராகிளைடிங் மூலம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அந்த வகையில், இந்த பிரமிடுகளின் மீது பறந்தபோது பாராமோட்டரிஸ்ட் அலெக்ஸ் லாங்கால் என்பவர், அங்கு ஒரு நாய் இருப்பதைக் கண்டறிந்தார். அந்த நாய், அங்குவரும் பறவைகளைக் குரைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த நாய் அங்கு எப்படிச் சென்றது என்பது குறித்த விளக்கம் எதுவும் தரவில்லை. இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எகிப்தில் உள்ள பிரமிடுகளில் மிகவும் பெரியது கிசா. இது, மிகவும் பழைமையான கட்டடங்களில் ஒன்று. எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகில், நைல் நதிக்கு 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது. கிசா பிரமிடுக்குள் குஃபு மன்னரின் கல்லறை இருக்கிறது.
வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1846173833461391521