வயதாகும் வேகத்தை குறைக்க பிளாஸ்மா: தொழிலதிபர் அசாத்தியம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மென் பொருள் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பவர் பிரையன் ஜான்சன். இவரின் தந்தை ரிச்சர்ட் ஜான்சன் (72 வயது)

கடந்த வருடம் பிரையன் ஜான்சன், தன் தந்தை ரிச்சர்டின் உடலுக்கு தன்னுடைய பிளாஸ்மாக்களை பரிமாற்றியதன் மூலம் தந்தை ரிச்சர்டின் வயதாகும் வேகத்தை 25 வருடங்களுக்கு அவரால் குறைக்க முடிந்தது.

இது ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்தது என்பது ஒருபுறமென்றாலும், வயதாகும் வேகத்தை செயற்கையாக ஒருவரால் கட்டுப்படுத்த முடிகிறது என்பது அசத்தலான விஷயமாக பார்க்கப்பட்டது.

பயோ-ஹேக் என இந்த சிகிச்சை முறையை குறிப்பிட்டுள்ள பிரையன், இந்த சிகிச்சைக்காக ஆண்டுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடுவதாகக் நேர்க்காணல் ஒன்றில் கூறியிருந்தார். மேலும் இதற்காக தன் தந்தை தினமும் 111 மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும், எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி பகிர்ந்திருந்தார். 

Related Posts