தீபாவளி இனிப்புகளில் அதிகமாக நிறமிகளைச் சேர்த்தால் நடவடிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தீபாவளி இனிப்பு தயாரிப்புக்கு அளவுக்கு அதிகமாக நிறமிகள் சேர்க்கப்பட்டிருப்பது கள ஆய்வில் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பேக்கரி மற்றும் ஓட்டல்களில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் கலப்படமற்ற மற்றும் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். 

இனிப்புகளை தயாரிக்க அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகள், அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அளவுக்கு அதிகமாக கலர் நிறமிகள் இனிப்பு வகைகளில் சேர்க்கப்பட்டிருப்பது களஆய்வில் கண்டறியப்பட்டால், உணவு மாதிரி எடுக்கப்பட்டு, உணவு பகுப்பாய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பகுப்பாய்வக அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவு வணிகரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

 இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய், நெய், வனஸ்பதி போன்ற பிற இதர மூலப் பொருட்களின் விவரங்களை முழுமையாக அதன் கொள்முதல் கேன்கள், டின், பாக்கெட்டுகள், மூட்டை போன்றவைகளில் லேபிளில் முழுமையாக அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தனியாக இருப்பு வைக்க வேண்டும். பால் சார்ந்த இனிப்பு வகைகளின் உபயோகிக்கும் கால அளவை லேபிளில் முழுமையாக குறிப்பிட வேண்டும். 

இனிப்பு மற்றும் கார வகைகளை தூய்மையான குடிநீரைக் கொண்டு தயாரிக்கப் வேண்டும். தயாரித்த பின் பாத்திரங்கள் உபகரணங்களை சுத்தமாக கழுவி பூஞ்சை தொற்று வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 

Related Posts