Font size:
Print
எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னாலும் ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியும்.
குறுகிய அரசியல் நோக்கங்கள் அல்லாமல், 220 லட்சம் மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் உறுதிப்படுத்தும் நாடு உருவாக்கப்பட வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தில் போட்டி மனப்பான்மையை விட, ஒன்றுபட்டு அதன்மூலம் அபிவிருத்தியை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இது காலத்தின் தேவையாகும் என்றார். (P)
Related Posts