24 மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (20) காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அந்தமான் கடற்பகுதியில்  நாளை (21) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பின்னர், வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 23 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று தெரிவித்துள்ளது.

பலமான காற்று (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர்) வீசக்கூடும் என்றும், அந்த கடற்பரப்புகளில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது. (P)


Related Posts