பெண்ணின் வயிற்றில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2 கத்தரிக்கோல் அகற்றம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில்  சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் காங்டாக்கிலுள்ள மருத்துவமனையில் அண்மையில் வயிற்றுவலி காரணமாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவரது வயிற்றுப்பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது அதில் 2 கத்தரிக்கோல்கள் இருந்தது தெரியவந்தது.

 அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, 12 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2012-ல் இதே எஸ்டிஎன்எம் மருத்துவமனையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். குடல்வால் அறுவை சிகிச்சையின்போது சிகிச்சை செய்தடாக்டர்கள் மறந்து அந்த கத்தரிக்கோல்களை வயிற்றிலேயே வைத்து தைத்துவிட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து எஸ்டிஎன்எம் மருத்துவமனை டாக்டர்கள் குழு, அந்தபெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சையைநடத்தி வயிற்றிலிருந்த 2 கத்தரிக்கோல்களை அகற்றினர். தற்போது அறுவை சிகிச்சை முடிந்தநிலையில் அந்த பெண் நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Posts