சேறு பூசும் சுவரொட்டி: ரங்காவை கைது செய்ய உத்தவு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு  பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் மிஹாலுக்கு எதிராக, சேறு பூசும் வகையிலான சுவரொட்டிகள் கொழும்பில்  ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார்   ஒருவரை கைது செய்தனர்.

இந்த சுவரொட்டிகளை ஒட்டுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, கூறினார் என, அவர், பொலிஸாருக்கு வாக்குமூலமளித்தார்.

  நீதிமன்ற உத்தரவின் பேரில் ரங்காவை கைது செய்ய கொழும்பு குற்றப்புலனாய்வு பொலிஸார் ரங்காவின் வீட்டுக்கு சென்றபோதும் அங்கு அவர் இருக்கவில்லை.

இதனால், உடனடியாக அவரை தேடிக்கண்டுபிடித்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு  பிரதம நீதவான் திலின கமகே, ​திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார். (P)


Related Posts