Font size:
Print
இந்தியாவில் பிறந்து உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோருக்கு CIF குளோபல் இந்தியன் என்ற விருது வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலில் மாற்றம் குறித்து விழுப்புணர்வை ஏற்படுத்தியதற்காக 2024ஆம் ஆண்டுக்கான விருது ஜக்கிவாசுதேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜக்கிவாசுதேவ் போதித்து வரும் யோகா, தியானம் உள்ளிட்டவை கனடாவின் பொதுநலத்துடன் ஒன்றுவதாக சிஐஎப் அமைப்பு கூறியுள்ளது. ரொறன்ரோவில் விருதை பெற்றுக்கொண்ட ஜக்கிவாசுதேவ், இந்த விருதில் கிடைக்கும் சுமார் 30 லட்ச ரூபாயை காவிரி காலிங் அமைப்புக்கு அளிப்பதாக தெரிவித்தார்.
11 கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் இதுவரை நடப்பட்டுள்ளதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மண்ணை காப்போம் என்ற முன்னெடுப்பை இதுவரை 400 கோடி பேரிடம் ஈஷா அறக்கட்டளை சேர்த்துள்ளது
Related Posts